10 ஆகஸ்ட் 2010

12 ஜூலை 2010

கருப்பு வெள்ளை காதலர்கள்

வண்ணத்திலும் வளர்கிறது காதல் 
ஆம்  எடுத்துகாட்டாய்...
கருப்பு வெள்ளை காதலர்கள் 
அப்படித்தான் ...
என் காதலும்
கருப்பு மையும், வெள்ளைக்காகிதமும்
கவிதைகளாய்!
என்னுள் காதல் செய்கின்றன 











16 ஜூன் 2010

தமிழ்ச்சொற்கள்

தூரிகை -பிர‌ஷ்

பனுவல்-நூல்,புத்த‌க‌ம்

தூவ‌ல்- பேனா

புரிசை- ம‌தில்

மேழி - ஏர்

வ‌துவை-ம‌ண‌மாலை

ம‌தி-நில‌வு

சாளர‌ம்-ஜ‌ன்ன‌ல்

க‌ட‌வுச்சீட்டு
-பாஸ்போர்ட்

சல்லியம்-சிறுச‌ண்டை

ச‌ர‌க்குந்து-லாரி

சால‌ம்-மாஜிக்

சுழியம்-பூஜ்ய‌ம்

சிலாகித்த‌ல் -ஆன‌ந்த‌ப்ப‌ட‌ல்

ந‌ற‌வு- தேன்

ந‌ர‌லுத‌ல் -ஒலித்த‌ல்

ஒண்மை -அழகு

ஒண்மை உயர் - அழகில் உயர்ந்த

வெண் முடியாள் -வெண்மை நிற (நரைத்த) முடிகொண்ட கிழவி

ஒருமுக - ஒரேமுகமாய்

நுண்துளை - நுண்ணிய துளையால்

நூற்மனதால் - நூற்ற மனதால்.. (நூற்ற என்பதற்கு சரியான வழக்கு தமிழ் 
தெரியவில்லை செய்த என்று கூட சொல்லலாம். )

நூற்ற -செய்த (நூல் நூற்றல் அதாவது கட்டுதல் என்பார்கள்.)

புலமிகு -புலமை மிகுந்த

வண்குழை -வண்மை மிகுந்த

வாயெழுத்து - வாய் எழுதும் எழுத்து - பேச்சு

வெண்ணிற மீனுறங்கும் -வெண்ணிறமாய் சுடரும் மீன்கள் உறங்கும்

விண்ணை - வானை

விறைக்காதோ சொல்-விறைச்சுடாதா சொல்லுங்க

23 ஏப்ரல் 2010

கல்லூரி பக்கங்கள்

கல்லூரிக்காலம் முடிந்ததை அறியாது ....
முகப்பான் முன் சிறிதுநேர ஒப்பனை ...
கொடியில் தொங்கும் சட்டைக்காக சிறிய சண்டை ...
ஒப்பனை முடிந்து ...
கல்லூரி அடையாள அட்டையை ....
அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களிடையேஅலைந்த என் கண்கள் ....
கண்ணீருடன் ...
ஆம் !
தேடலின் நடுவே கலைந்த ....என்
"கல்லூரி பக்கங்கள் "