12 ஜூன் 2011

வட்டிக்கு வரிகள்

தருணம் ஒன்று தந்துவிடடி
பெண்ணே ...உன்னை நேர்காண
பின்பு....
வைரமுத்துவும்
வட்டிக்கு வரிகள் கேட்பான்
என்னிடத்தில்!  


14 ஏப்ரல் 2011

ஒரு புள்ளி மச்சம்

ஓவியனின் மேன்மையை உன்னை
கண்டபின்தான் உணர்ந்தேன்
ஆம் ...
ஒரு புள்ளியில் வரைந்து விட்டான்
ஓவியம் !!
உன் உதடுகளுக்குமேல் ஒரு புள்ளி மச்சம்
ஓவியமாய் நீ !

10 ஆகஸ்ட் 2010

12 ஜூலை 2010

கருப்பு வெள்ளை காதலர்கள்

வண்ணத்திலும் வளர்கிறது காதல் 
ஆம்  எடுத்துகாட்டாய்...
கருப்பு வெள்ளை காதலர்கள் 
அப்படித்தான் ...
என் காதலும்
கருப்பு மையும், வெள்ளைக்காகிதமும்
கவிதைகளாய்!
என்னுள் காதல் செய்கின்றன