14 ஜூன் 2011

நான் பாவம்

இனியொரு முறை உன் வீட்டு
முகப்பான் முன் செல்லாதே
பின்பு
பாவம் நான் ...
என்னை விட அழகாய் சொல்லிவிடும்
உன் அழகை
கவிதைகளாய்!

12 ஜூன் 2011

வட்டிக்கு வரிகள்

தருணம் ஒன்று தந்துவிடடி
பெண்ணே ...உன்னை நேர்காண
பின்பு....
வைரமுத்துவும்
வட்டிக்கு வரிகள் கேட்பான்
என்னிடத்தில்!  


14 ஏப்ரல் 2011

ஒரு புள்ளி மச்சம்

ஓவியனின் மேன்மையை உன்னை
கண்டபின்தான் உணர்ந்தேன்
ஆம் ...
ஒரு புள்ளியில் வரைந்து விட்டான்
ஓவியம் !!
உன் உதடுகளுக்குமேல் ஒரு புள்ளி மச்சம்
ஓவியமாய் நீ !

10 ஆகஸ்ட் 2010