05 ஆகஸ்ட் 2011

பிடித்தது .....

 பறித்த பின்னரும் பங்கு போடவரும் 
தேனீக்கள் உன் கூந்தலில் ஏறிய
மல்லிச்சரத்திற்காக .... 

06 ஜூலை 2011

கணிப்பொறி காதலன்

இயந்திர உலகில் நானும் ஒருவனாய் இயங்க
வரையறுக்கப்பட்ட தூரத்தில் வாழ்க்கை ஓட்டம்
ஆம்..
விடிந்தால் அலுவலகமும் ,
பொழுது முடிந்தால் வீடுமாய்
இடைப்பட்ட நேரத்தில் காதலிக்கிறேன்
காசுக்கு  கணிப்பொறியை ..
காதலியின் கைப்பிடித்து ஊடலும்
விசைப்பலகை உரையாடலுமாய் எட்டுமணி நேரம் ..


பசித்தால் புசிப்பதை மறந்து
காலப்பட்டியலில் கை நனைத்து
கரம் பிடித்து உண்ணும்  உணவை
விரல் பிடித்து விட்டுச்செல்கிறேன்
அளவு சாப்பாட்டில் அரை பாதியை..

ஆண்டு அறுபதுக்கு முன்னே அந்நியன்
கொடுத்த சுதந்திரத்தை இன்று
ஆடைப்போட்டு காட்டும்  பெண்கள் ..
உடை சுதந்திரத்தில் உடலையும் காட்டுகின்றனர் ..

எங்கே தொலைந்தார்கள் ?
எட்டு முழச்சேலையை இடைமறைய
இழுத்துக்கட்டி ..இடைக்குகீழ் தொங்கும் மயிரிழைக்கு
மன்மதப்பூவாம் மல்லி ஏந்தி ..
கரு முழுமதிக்கு இணையாய் கருப்பு பொட்டை
முன் நெற்றி வரும் பெண்கள் ..எங்கே?

இப்படியான என் வாழ்க்கை ஓட்டத்தில் ..
எப்படியோ விழுந்துவிட்டேன் ..
எழுந்து பார்க்கையில் என்னமோ இழபபதாய் உணர்வு
விழுந்த இடம் தேடி வெடுக்கென்று நான் செல்ல
விழுந்த இடத்தில் விருச்சமாய் நீயிருந்தாய் ..

உன்னிருக்கும் என் இதயம் பறிக்க
என்னிடத்து பட்டாம்பூச்சிகள் பறக்கும்போதேல்லாம்
உன்னிடத்து இமைமடித்து மலரும் கண்ணிரெண்டு மலர்களோ
கார்நிவோராஸ் மலராய் மலர்ந்திருக்க ..
என்னிடத்து பட்டாம்பூச்சிகளை
பசைப்போட்டு பறிக்கிறியே..... 


   ....                      தொடருவேன் ....

15 ஜூன் 2011

நிலாப்பெண்

உலகத்தின் காதலர்களை எல்லாம்
கவிஞ்சர்களாக்கும்
ஒரேப்பெண் !
உன்னை பிரதி எடுத்து நிற்கும் 
நிலவு மட்டுமே !

 





காதல் குறள்

புரியாத  பொருள்  ஒன்றும் இல்லை
என்னிடத்தில் உன்னைத்தவிர ...





14 ஜூன் 2011

காதல் ..

கல்லூரி காதலும்
கடையில் வாங்கும் பொருளை போன்றது
காதலின் வரைவுக்காலம் (exp date)
கல்லூரி முடியும் வரை....
------------------------------------------------------------------

சொல்லிய காதல் சுமைதரும் ....
சொல்லாத காதல் சுகம்தரும்...
------------------------------------------------------------------
காதலித்தவர்களின் பரவலான கூற்று...
என் காதல் தோற்றுவிட்டது...
என்று காதலை அகம் கூறுகிறார்கள்
உண்மையில் அங்கே காதல் தோற்பதில்லை
தன காதலை ஏற்காத காதலனும்,காதலியும் தான்
தோற்கிறார்கள்....!!!
--------------------------------------------------------------------

காதல் ..
அசைவில்லா நீரில் தெரியும்
அழகிய உன் முகம் போன்றது...
அப்படியே பார்த்துக்கொள்..
சொல்லிவிடாதே உன் காதலை
கல்லெறிந்த நீரைப்போல் கலைந்துவிடும் ...
உன் முகம் போன்ற காதல்...

நான் பாவம்

இனியொரு முறை உன் வீட்டு
முகப்பான் முன் செல்லாதே
பின்பு
பாவம் நான் ...
என்னை விட அழகாய் சொல்லிவிடும்
உன் அழகை
கவிதைகளாய்!

12 ஜூன் 2011

வட்டிக்கு வரிகள்

தருணம் ஒன்று தந்துவிடடி
பெண்ணே ...உன்னை நேர்காண
பின்பு....
வைரமுத்துவும்
வட்டிக்கு வரிகள் கேட்பான்
என்னிடத்தில்!