06 ஆகஸ்ட் 2011

கலைந்த கோலம்

கலைந்த அழகான 
ஒரு கோலம் 
அவளின் குழல் ..


உருகிய எரிமலைகளுக்கிடையில் 
ஓடும் பாலாறு 
அவளின் சிரிப்பு ...


பிச்சைக்காரன்

ஆனேன் !
பிச்சைக்காரன் 
சில்லறைக்காக அல்ல 
உன் 
சிரிப்புக்காக ...


ஓவிய மச்சம்

ஓவியனின் மேன்மையை உன்னை 
கண்டபின்தான் உணர்ந்தேன் 
ஆம் ..
எப்படிச்சொல்ல  புள்ளி ஒன்றில்
வரைந்துவிட்டான் ஓவியம் 
 உன் உதடுகளுக்கு மேல் 
ஒரு புள்ளி மச்சம் 
ஓவியமாய் நீ !
 

நன்றி

சிற்பங்கள் ஒருபோதும்  தன்னிலை மாறாது
அப்படித்தான் நீயும்!
நான் பார்க்கும்போதெல்லாம் 
சிரிக்கும் சிற்பமாய் என் முன்னே 
சிரிப்பதற்கும் ..
உன்னை செதுக்கிய
சிற்பிக்கும் 
நன்றி ...

05 ஆகஸ்ட் 2011

பிடித்தது .....

 பறித்த பின்னரும் பங்கு போடவரும் 
தேனீக்கள் உன் கூந்தலில் ஏறிய
மல்லிச்சரத்திற்காக .... 

06 ஜூலை 2011

கணிப்பொறி காதலன்

இயந்திர உலகில் நானும் ஒருவனாய் இயங்க
வரையறுக்கப்பட்ட தூரத்தில் வாழ்க்கை ஓட்டம்
ஆம்..
விடிந்தால் அலுவலகமும் ,
பொழுது முடிந்தால் வீடுமாய்
இடைப்பட்ட நேரத்தில் காதலிக்கிறேன்
காசுக்கு  கணிப்பொறியை ..
காதலியின் கைப்பிடித்து ஊடலும்
விசைப்பலகை உரையாடலுமாய் எட்டுமணி நேரம் ..


பசித்தால் புசிப்பதை மறந்து
காலப்பட்டியலில் கை நனைத்து
கரம் பிடித்து உண்ணும்  உணவை
விரல் பிடித்து விட்டுச்செல்கிறேன்
அளவு சாப்பாட்டில் அரை பாதியை..

ஆண்டு அறுபதுக்கு முன்னே அந்நியன்
கொடுத்த சுதந்திரத்தை இன்று
ஆடைப்போட்டு காட்டும்  பெண்கள் ..
உடை சுதந்திரத்தில் உடலையும் காட்டுகின்றனர் ..

எங்கே தொலைந்தார்கள் ?
எட்டு முழச்சேலையை இடைமறைய
இழுத்துக்கட்டி ..இடைக்குகீழ் தொங்கும் மயிரிழைக்கு
மன்மதப்பூவாம் மல்லி ஏந்தி ..
கரு முழுமதிக்கு இணையாய் கருப்பு பொட்டை
முன் நெற்றி வரும் பெண்கள் ..எங்கே?

இப்படியான என் வாழ்க்கை ஓட்டத்தில் ..
எப்படியோ விழுந்துவிட்டேன் ..
எழுந்து பார்க்கையில் என்னமோ இழபபதாய் உணர்வு
விழுந்த இடம் தேடி வெடுக்கென்று நான் செல்ல
விழுந்த இடத்தில் விருச்சமாய் நீயிருந்தாய் ..

உன்னிருக்கும் என் இதயம் பறிக்க
என்னிடத்து பட்டாம்பூச்சிகள் பறக்கும்போதேல்லாம்
உன்னிடத்து இமைமடித்து மலரும் கண்ணிரெண்டு மலர்களோ
கார்நிவோராஸ் மலராய் மலர்ந்திருக்க ..
என்னிடத்து பட்டாம்பூச்சிகளை
பசைப்போட்டு பறிக்கிறியே..... 


   ....                      தொடருவேன் ....

15 ஜூன் 2011

நிலாப்பெண்

உலகத்தின் காதலர்களை எல்லாம்
கவிஞ்சர்களாக்கும்
ஒரேப்பெண் !
உன்னை பிரதி எடுத்து நிற்கும் 
நிலவு மட்டுமே !