23 ஏப்ரல் 2010

கல்லூரி பக்கங்கள்

கல்லூரிக்காலம் முடிந்ததை அறியாது ....
முகப்பான் முன் சிறிதுநேர ஒப்பனை ...
கொடியில் தொங்கும் சட்டைக்காக சிறிய சண்டை ...
ஒப்பனை முடிந்து ...
கல்லூரி அடையாள அட்டையை ....
அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களிடையேஅலைந்த என் கண்கள் ....
கண்ணீருடன் ...
ஆம் !
தேடலின் நடுவே கலைந்த ....என்
"கல்லூரி பக்கங்கள் "

15 ஏப்ரல் 2010

படித்ததில் பிடித்தது



எழுந்துவிட்ட அதிகாலை,
எழுப்பிவிட்ட கடிகாரம்,
காத்திருக்கும் கடமை,
இன்னும் உறங்கும் நண்பன்,
சர்க்கரை அதிகமாய் என்று
கேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,
இயந்திரம் தந்த இதமான வெந்நீர்,
விரும்பிய இசைபாடும் குறுவட்டு,
சுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,
இரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,
எனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,
இத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,
இரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,
நாளைய காலையின் விழிப்பிலாவது

தாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாருஎனும் குரல் கேட்காதா

என்ற எதிர்பார்ப்போடு…..
இங்ஙனம்,
பாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,
மென்பொருள் வல்லுனன் .
(
பொருளை தேடுவதில் வாழ்க்கையை தொழைத்த வல்லுனன்)

06 ஏப்ரல் 2010

என் மனம்


என் மனம் 
எப்போதும் எதிர்பார்ப்புகளை 
அடுக்கி வைத்து ...
மற்றவர்கள் எரிந்து செல்லும் 
ஏமாற்றங்களை சேகரிக்கும் 
குப்பைத்தொட்டிதான்....


என் காதல் 
நட்பில் தொடங்கி 
காதலை அடையவில்லை 
பார்வையில் தொடங்கி 
கவிதைகளில் பயணித்து 
காதலை தொட்டு ..
பின் 
காதலுக்கும் நட்புக்குமான 
இடையில் பெயர் தெரியா
ஒரு பந்தத்தை நிர்வகித்து 
நட்பில் குறைந்து 
இன்று 
என்ன பந்தத்தில் இருக்கிறேன்  
என்று தெரியாமல் ...
தொடர்கிறேன் ...
என்னின்
எதிர்மறை காதலை .